Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணைகிறதா அஞ்சான் கூட்டணி? சூர்யா கொடுத்த நம்பிக்கை!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (15:39 IST)
சூர்யா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான அஞ்சான் படம் படுதோல்வி அடைந்த நிலையில் இப்போது இந்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைக்க என கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் கூட்டணியுடன் உருவாகி 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸானது அஞ்சான் திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான திரைப்படம் படுதோல்வி அடைந்தது. திரைக்கதை என்ற வஸ்து இல்லாமல் எடுக்கப்பட்ட அஞ்சானை இணையத்திலும், பத்திரிகைகளிலும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் படத்தின் இயக்குனர் லிங்குசாமி கொடுத்த பில்டப்புகளை நம்பி சென்றவர்கள் ஏமாந்ததால் அவரைப் பற்றி மீம்ஸ்களாகப் போட்டு கிழித்தெறிந்தனர். அந்த படத்தில் சறுக்கிய லிங்குசாமி இன்னமும் தலைதூக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ் சினிமா கண்டிராத தோல்வி படமாக அமைந்தது அஞ்சான்.

இதையடுத்து தற்போது ‘தி வாரியர்’ படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பற்றி ரிலீஸூக்கு முன்பே நேர்மறையான தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து சூர்யா மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து, அவரிடம் கதை கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் கிளாமர் உடையில் பிரியங்கா மோகனின் ரீசண்ட் க்ளிக்ஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை உருவாய் ஜொலிக்கும் ஐஸ்வர்யா லஷ்மி!

அந்த படத்தால் என்னைப் பள்ளியை விட்டு நின்றுவிட சொன்னார்கள்… ஊர்வசி பகிர்ந்த தகவல்!

லாரன்ஸ் மற்றும் அவர் சகோதரர் நடிப்பில் உருவாகும் புல்லட்… டீசர் எப்படி?

நஷ்டத்தை நோக்கி விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’… விற்பனை ஆகாத சேட்டிலைட் உரிமை!

அடுத்த கட்டுரையில்
Show comments