Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 7 April 2025
webdunia

விமலுக்கு தங்கையாக நடிக்கும் அனிதா சம்பத்!

Advertiesment
Anitha sambath
, திங்கள், 22 நவம்பர் 2021 (14:31 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.
 
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டதாக திடீரென அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருந்தார். அதன்பின்னர் பிக்பாஸ் 4ல் கலந்துக்கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

webdunia
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அனிதாவிற்கு படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது,  மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கும் இப்படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விமலுக்கு தங்கை கேரக்டரில் அனிதா நடிக்கிறார்.  தன் தங்கைக்கு திருமணம் செய்ய போராடும் அண்ணனின் வாழ்க்கையை குறித்து படத்தின் கதை நகர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென விதவிதமாய் போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளும் காஜல் அகர்வால்!