Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனிதா தற்கொலை; எஸ்.வி. சேகர் ட்வீட்டால் கொந்தளித்த நெட்டிசன்கள்

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (11:35 IST)
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 
நீட் அனிதாவை கொன்றுவிட்டது என்று கூறி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. நீட்டுக்கு எதிராக அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் நடிகரும், பாஜக உறுப்பினருமான எஸ்.வி. சேகர் நுழைவுத்தேர்வு குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ‘இனி தமிழகத்தில் எதிலும் எந்த நுழைவுத்தேர்வும் கிடையாது. அனைவருக்கும் அரசு வேலை. ஆபீஸ் வரவேண்டாம். சம்பளம் வீடு தேடி வரும். மகிழ்ச்சிதானே’ என ட்வீட் செய்துள்ளார். 
 
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கோபத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். உங்களுக்கு மக்களின் ஆதங்கம் கிண்டலாக தெரிகிறதா? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் கிராமத்துல இருந்து படிச்சி பாருங்க தெரியும்?  மாணவர்களின் கஷ்டம் என பதில் ட்வீட் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இணையும் படத்தின் ஹீரோயின் இவரா?

தியேட்டரில் படுதோல்வி எதிரொலி… திட்டமிட்டதற்கு முன்பே ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா கங்குவா?

நயன்தாரா திருமணத்தை அடுத்து இன்னொரு நடிகையின் திருமண வீடியோ.. அதுவும் நெட்பிளிக்ஸ் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments