அனிருத்தின் அட்டகாசமான ‘தர்பார்’ அப்டேட்: ரஜினி ரசிகர்கள் குஷி!

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (21:35 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார்’ திரைப்படத்தின் அப்டேட் இன்று அல்லது நாளை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று லோடிங் ஆகி கொண்டிருப்பதாகவும், விரைவில் இந்த பாடல் சிங்கிள் பாடலாக வெளிவரும் என்றும் தனது டுவிட்டில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதை அடுத்து ரஜினி ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
 
ஏற்கனவே தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் 7ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகவும் அதற்கு முன்னர் இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது தெரிந்ததே
 
இந்த நிலையில் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவல் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் லைகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments