யுவன் ஷங்கர் ராஜாவைப் பிரியும் வெங்கட்பிரபு… சிவகார்த்திகேயன் படத்துக்கு இவர்தான் இசையா?

vinoth
புதன், 22 அக்டோபர் 2025 (10:28 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று 455 கோடி ரூபாய் வசூலித்தது. இதையடுத்து வெங்கட்பிரபு அடுத்து யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் இதுவரை அது சம்மந்தமாக எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அவரின் அடுத்தப் படம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க, அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதவாக்கில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக வெங்கட்பிரபு இயக்கும் படங்களுக்கு யுவன் அல்லது பிரேம்ஜி ஆகிய இருவரில் ஒருவர்தான் இசையமைப்பார்கள். ஆனால் இப்போது முதல் முறையாக இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் அழுத்தத்தால் இந்த படத்திற்குள் அனிருத் கொண்டுவரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் ஜூஸ்ஸையே குறை சொல்றீங்களா? வன்முறையில் இறங்கிய ஆதிரை, கலையரசன்! Biggboss Season 9!

‘ஆமாம் நான் வாரிசு நடிகன்தான். ஆனால்…’- துருவ் விக்ரம் பதில்!

லோகா நேரடியாக தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தால் படுதோல்வி ஆகியிருக்கும்… பிரபல தயாரிப்பாளர் கருத்து!

ஆசியக் கோப்பை வேண்டுமென்றால் என்னை வைத்து விழா நடத்துங்கள்… மோசின் நக்வி உறுதி!

பிக் பாஸ் 9: மூன்றாவது வார எலிமினேஷன் பட்டியலில் 8 பேர்!

அடுத்த கட்டுரையில்
Show comments