சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இசையமைப்பாளரின் கனவாக இருக்கும் நிலையில் இளம் இசைப்புயல் அனிருத், ரஜினியை நெருங்கிவிட்டதாகவே கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.
இன்று அனிருத்தின் ஸ்டுடியோவுக்கு திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த், அனிருத்துக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அனிருத், தலைவரின் சர்ப்ரைஸ் விசிட் என்று கூறியுள்ளார்.
மேலும் ரஜினியின் அடுத்த் படத்திற்கு இசையமைப்பது குறித்து அனிருத் பேசியதாக தெரிகிறது. ஆனால் ரஜினியின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்பதால் அந்த படத்தில் வாய்ப்பு இல்லை என்றும், ரஞ்சித் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் நிச்சயம் அனிருத் தான் என்றும் கூறப்படுகிறது