Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை ‘யாஷிகா படத்துக்கு இசையமைக்கும் அனிருத்...

நடிகை ‘யாஷிகா படத்துக்கு இசையமைக்கும் அனிருத்...
, புதன், 20 பிப்ரவரி 2019 (16:29 IST)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகி யாஷிகா. இவர் விஜய் டிவியின் பிக் பாஸ்  சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவானது.
இதனையடுத்து தற்போது இவர் கிருஷ்ணாவின் 'கழுகு 2', 'ஓடவும்  முடியாது ஒளியவும் முடியாது', யோகிபாபுவின் ஜாம்பி, ஆரவ்வின் 'ராஜபீமா' என்று வரிசையாய் படங்களில்  நடித்துக்கொண்டிருக்கிறார்.
webdunia
மேலும் ஏ.ஆர் . முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்த ஐயப்பன் இயக்கும் ஒரு புதிய படத்தில் யாஷிகா நடிக்க இருப்பதாகவும், இதற்கு அனிருத் இசையமைப்பதாகவும், இப்படத்தை லைகா புரொடெக்சன்ஸ் தயாரிக்க  உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
 
யாஷிகா துருவங்கள் 16, அருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டப்பிங்கில் நாஞ்சில் சம்பத்தை ஆர்.ஜே. பாலாஜி எப்படி கலாய்த்திருக்காருன்னு பாருங்க!