Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் 'விசுவாசம்' படத்தில் அனிருத்! 3வது முறையாக இணைந்தார்

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (23:53 IST)
தல அஜித் நடிக்கவுள்ள 58வது படமான 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் பரிசீலனை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா, சாம் சிஎஸ் உள்பட ஒருசில இசையமைப்பாளர்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அனிருத்தே இசையமைப்பார் என்று தெரியவந்துள்ளது.

அஜித் நடிப்பில் சிவா இயக்கிய 'வேதாளம்' மற்றும் 'விவேகம்' படங்களுக்கு அட்டகாசமாக இசையமைத்த அனிருத், மீண்டும் 3வது முறையாக இந்த கூட்டணியில் இணைகிறார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் பொங்கல் திருநாளில் வெளிவரவுள்ள விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பட்ஜெட் வெறும் ரூ.70 லட்சம்.. வசூலோ ரூ.70 கோடி.. திரைப்படம்ன்னா இப்படி இருக்கனும்..!

ரத்தக் காட்டேரியாக மாறும் ராஷ்மிகா!? கவனம் ஈர்க்கும் Thama Teaser!

நீல நிற சேலையில் எக்ஸ்ட்ரா அழகோடு ஜொலிக்கும் திவ்யபாரதி!

கவர்ச்சித் தூக்கலான கலர்ஃபுல் உடையில் மிளுறும் திஷா பதானி!

மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘மாமன்னன்’ படங்களை மிஸ் செய்துவிட்டேன் – அனுபமா வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments