Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’ஐ லவ் யூ சார்’’…பிரபல இசையமைப்பாளருக்கு வாழ்த்து கூறிய அனிருத்

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (18:09 IST)
இந்தியாவின் பொக்கிஷமாகப் பார்க்கப்படுபவரும், ஆஸ்கார் நாயகருமான ஏ.ஆர்.ரஹ்மான் இன்று (06-1-21) ஆம் தேதி தனது 54 வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். எனவே இசையமைப்பாளார் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஹ்மானுக்கு ஐலவ்யு சார் என வாழ்த்தியுள்ளார்.
 


மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில் வெளியான படம் ரோஜா. இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் திலீப்குமார் என்ற ஏ.ஆர்.ரஹ்மான்.
இப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு ரஹ்மானின் பாடல்களும் இசையும் ஒருகாரணம்.

இதனையடுத்து, தனது ஒரே படத்திலேயே இளையராஜாவுக்கு போட்டியாக ரஹ்மான் உருவானார். இத்தனைக்கும் இளையராஜாவிடன் கீ போர்ட் பிளேயராக தனது இளம் வயதில் தந்தையின் மரணத்திற்குப் பின் இசைத்தொழிலைத் தொடங்கியவர் ரஹ்மான்.

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராகப் புகழ்பெற்ற ரஹ்மான 2009 ஆம் ஆண்டு சிறந்த பாடம் மற்றும் சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்து இன்றும் பலருக்கும் முன்னோடியாக உள்ளார்.
 

சமீபத்தில்ட் .A.R.ரஹ்மான் அவர்களின் அன்புத்தாயார் திருமதி.கரீமாபேகம் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தனது 54 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். எனவே இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அதில்,’’ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பேரரசர் ஏ.ஆர்.ரஹ்மான் ஐ லவ் யு சார் ’’எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments