Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்: உறுதி செய்த அனிருத்!

Advertiesment
நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்: உறுதி செய்த அனிருத்!
, வியாழன், 11 ஜனவரி 2018 (20:00 IST)
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் உள்ளதாகவும், இருவரும் காதலித்து வருவதாக பல செய்திகள் வந்தன. ஆனால் அவர்கள் இருவரும் இதுவரை அதுபற்றி பேசவே இல்லை.
 
அவ்வப்போது நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அவை வைரலாக பரவும். ஆனால் இருவரும் தங்கள் காதல் குறித்து இதுவரை ஊடகத்தில் பேசவே இல்லை. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் விக்னேஷ் சிவனை வைத்துக்கொண்டு அதற்கான பதிலை கூறியுள்ளார்.
 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதையடுத்து படத்தின் ப்ரோமோஷனுக்காக விழா ஒன்று நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்திடம் பல சுவாரஸ்யமான கேள்விகளை தொகுப்பாளர்கள் கேட்கப்பட்டனர்.
 
குறிப்பாக இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் எப்போது திருமணம்? யாருடன் திருமணம்? பிடித்த நடிகை யார்? என பல கேள்விகளை கேட்டனர். ஆனால் அவர் நேரடியாக பதில் சொல்லாமல் வெகு நேரமாக சமாளித்தார். ஆனாலும் விடாமல் தொகுப்பாளர்கள் கேள்விகளை கேட்க அந்த கேள்விக்கு முடிவு காட்டும் விதமாக இசைமைப்பாளர் அனிருத், நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் ஒரே பதில் நயன்தாராதான், போதுமா என்றார். விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் செய்ய உள்ளதை அனிருத் உறுதி செய்ததும் அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்கெட்ச் - முன்னோட்டம்