Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வாட்டி நெல்சன் குறி தப்பாது… ஜெயிலர் மேடையில் அனிருத் நம்பிக்கை!

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (07:38 IST)
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

அப்போது பேசிய படத்தின் இசையமைப்பாளர் அனிருத் “நெல்சன் குறி இந்த முறை தப்பாது. தலைவருக்காக பாட்டு மட்டுமில்ல உயிரையே கொடுப்பேன்” என உணர்ச்சி பொங்க பேசினார். நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் ரஜினி படத்தில் இருந்து நெல்சனை நீக்க விநியோகஸ்தர்கள் வலியுறுத்தியதாக ரஜினிகாந்த் அதே மேடையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த நெல்சன் மூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான அந்த படம் மோசமான விமர்சங்களைப் பெற்றது. வசூலும் பெரியளவில் இல்லை. இந்த படத்தின் தோல்வியால் நெல்சன் சமூகவலைதளங்களில் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments