Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 26 April 2025
webdunia

ஒரு வீட்டின் 50 வருடக் கதை… கவனம் ஈர்க்கும் அனந்தம் டீசர்- நேரடி ஜி 5 வெளியீடு!

Advertiesment
அனந்தம்
, திங்கள், 4 ஏப்ரல் 2022 (15:56 IST)
பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணிக் கலைஞர்கள் நடித்திருக்கும் அனந்தம் வெப் தொடரின் டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

நடிகர் பிரகாஷ்ராஜ் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர்  நடிப்பில்  எட்டு அத்தியாயங்கள் கொண்ட தொடராக அனந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

1964 - 2015 வரை ஒரு வீட்டில் வாழ்ந்த நபர்களின் வாழ்வில் நடந்த , உணர்ச்சிகரமான தருணங்களை சொல்லும் விதமாக இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. மணிரத்னத்தின் உதவியாளர் பிரியா இந்த தொடரை இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி ஜி 5 தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த தொடரின் டீசர் சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவால் வெளியிடப்பட்டு நல்ல கவனத்தைப் பெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிப்ரான் இசையில் கணமான வரிகளில் டாணாகாரன் ”துடித்தெழு தோழா” லிரிக்கல் வீடியோ!