Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாத்தி சொல்லிட்டேன்.. என்னை யாரும் கலாய்க்காதீங்க : ஆனந்தராஜ் வேண்டுகோள்

Advertiesment
Maragadha Naanayam
, ஞாயிறு, 25 ஜூன் 2017 (20:24 IST)
சினிமா விழாவில் ஒரு வார்த்தையை தவறாக உச்சரித்ததால், அதை வைத்து தன்னை யாரும் கலாய்க்க வேண்டாம் என நடிகர் ஆனந்தராஜ் வேடிக்கையாக வேண்டுகோள் விடுத்தார்.


 

 
தமிழ் சினிமாவில் அதிரடி வில்லனாக பல படங்களில் நடித்து வந்த ஆனந்தராஜ், கடந்த சில வருடங்களாக காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இவரின் காமெடி நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. சமீபத்தில் இவர் நடித்து வெளியான மரகதநாணயம் படமும் ஹிட் ஆகியுள்ளது.
 
சமீபத்தில் இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு ஆனந்தராஜ் பேசிய போது செக்சஸ் மீட் என கூறினார். இதைக் கேட்டு அரங்கில் இருந்த அனைவரும் சிரித்தனர். அதன் பின்பும் மீண்டும் மீண்டும் செக்சஸ் மீட் எனவே அவர் திரும்ப திரும்ப கூறினார். அதன் பின் ஒருவழியாக கடைசியில் சக்சஸ் மீட் என சொல்லி முடித்தார். எனவே, இந்த வார்த்தையை வைத்து தன்னை யாரும் கலாய்க்க வேண்டாம் என அவர் வேடிக்கையாக கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஐபி 2 - கலக்கல் டிரெய்லர் வீடியோ