Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளியே வரமாட்டேன் போடா… அஜித்தைக் கிண்டல் செய்த ஊடகம் – பொங்கி எழுந்த ரசிகர்கள்!

வெளியே வரமாட்டேன் போடா… அஜித்தைக் கிண்டல் செய்த ஊடகம் – பொங்கி எழுந்த ரசிகர்கள்!
, வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (15:31 IST)
சமீபத்தில் ட்ரண்டான் இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக்கை வைத்து அஜித்தைக் கிண்டல் செய்துள்ளது ஆனந்த விகடன்.

இந்தி திணிப்புக்காக தமிழகமே ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்பட ஒருசில திரை நட்சத்திரங்கள் திடீரென இந்தி தெரியாது போடா மற்றும் ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ போன்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்களை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இந்த ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரண்ட் ஆனதை அடுத்து இப்போது கர்நாடகாவிலும் இதைப் பலரும் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் அந்த வாசகத்தை வேறு மாதிரி மாற்றி அஜித்தைக் கேலி செய்யும் விதமாக ஒரு படத்தை வெளியிட்டுள்ளது ஆனந்த விகடன். அதில் ‘வெளியே வரமாட்டேன் போடா’ என்ற வாசகம் தாங்கிய டிஷர்ட்டை அஜித் அணிந்திருப்பது போல புகைப்படத்தை வெளியிட, இதைப் பார்த்து அஜித் ரசிகர்கள் கடுப்பாகி, விகடனை கண்டபடி சமூகவலைதளங்களில் திட்ட ஆரம்பித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே ஒரு டுவிட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்பித்தாரா சூர்யா? பரபரப்பு தகவல்