திரௌபதி படத்திற்கு விமர்சனம் எழுதியுள்ள ஆனந்த விகடன் பத்திரிக்கை அந்த படத்துக்கு 29 மார்க்குகளை வழங்கியுள்ளது.
ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத நடிகர் நடிகைகள் மற்றும் இதுவரை வெளியே தெரியாத இயக்குனர் என குறைந்த பட்ஜெட்டில் உருவான திரௌபதி திரைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகியது. கிட்டத்தட்ட 330 திரைகளில் வெளியான இந்த படம் முதல் நாளிலேயே தனது பட்ஜெட்டை விட அதிகமாக வசுலித்து விட்டதாக சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட இடைநிலை சாதி மக்கள் மற்றும் அமைப்புகளின் ஆதரவு காரணமாக இந்த படம் நல்ல வசூலை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த படம் சாதியப் பிரிவினைகளை ஊக்குவிக்கிறது என சொல்லி விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தில் ஆனந்த விகடன் பத்திரிக்கை வெறும் 29 மார்க்குகளே வழங்கியுள்ளது. இதுவரை எந்தவொரு படத்துக்கும் விகடன் இவ்வளவு கம்மியாக மார்க்குகளை வாங்கியதில்லை என சொல்லப்படுகிறது.