Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படுக்கை அறை காட்சியா... பதறும் நடிகை!

Advertiesment
படுக்கை அறை காட்சியா... பதறும் நடிகை!
, செவ்வாய், 1 மே 2018 (13:22 IST)
நடிகை அமைரா தஸ்தூர் தனுஷுடன் அனேகன் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இஷாக் என்ற ஹிந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானர். 
 
அதன் பின்னர் இவர் நடிப்பில் மிஸ்டர் எக்ஸ் ஹிந்தி படமும் வெளியானது. ஆனால், இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால், மனவருத்துடன் இருக்கிறார் அமிரா.
 
இது குறித்து அவர் கூறியதாவது, முதல் படம் ஓடவில்லை என்றாலும், நல்ல நடிகை என்று பெயர் கிடைத்தது. எனவே, படம் பற்றி வருந்தவில்லை. 
 
அடுத்து இரண்டாவது படமும் ஒடவில்லை. இதனால் மனவேதனை அடைந்தேன். வீட்டை விட்டு வெளியே வரவில்லை. டான்ஸ் கிளாஸ், ஜிம்முக்கும் போகவில்லை. 
 
பின்னர் மாடலிங் செய்ய துவங்கினேன். சிறிய வி‌ஷயத்துக்கும் நான் அழுது விடுவேன். காதல் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. எனவே போலியாக சினிமாவில் நடிப்பது கடினமாக இருக்கிறது.
 
படுக்கை அறை காட்சிகளில் நடிக்க மாட்டேன். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். எனவே, என் தந்தையை வேதனைப்படுத்தும் விதத்தில் உடலை காட்டி நடிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து