மதராச பட்டினம் படத்தின் முலம் தமிழ் திலை உலகில் அறிமுகமானவர் எமிஜாக்சன். அதன் பிறகு இந்தி பட உலகிலும் கால் பதித்தார். தற்போது ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ளார்.
ரஜினிகாந்துடன் நடித்த 2.0 படத்தின் அனுபவம், சல்மான்கான் கிசுகிசுக்கள் பற்றி மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பதில் அளித்த எமிஜாக்சன் கூறியதாவது:-
ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் நடித்தது இனிமையான அனுபவம். அந்த படத்தின் பஸ்ட் லுக் வெளியிடும் நிகழ்ச்சியை சமீபத்தில் மும்பையில் நடத்தி முடித்தனர். அந்த விழாவுக்கு செல்வதற்கு முன்னால் நானும் ரஜினிகாந்தும் ‘2.0’ படப்பிடிப்பில் முக்கிய காட்சி ஒன்றில் நடித்துக்கொண்டு இருந்தோம்.
அப்போது அவரிடம் ‘2.0’ படவிழாவில் கலந்து கொள்ளப்போவதை நினைத்து நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், ‘எமி நான் நிஜமாகவே அந்த விழாவை நினைத்து மிகவும் பதற்றமாக இருக்கிறேன். ஊடகங்கள் கவனிக்கும் நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்ளும்போதெல்லாம் இந்த பதற்றம் எனக்கு வந்து விடுகிறது என்றார். நான் அவரிடம், நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார். எனவே அப்படி பதற்றப்படக்கூடாது என்றேன். அதற்கு அவர் அது உண்மைதான். ஆனாலும் எனக்கு பதற்றம் வருகிறது என்றார். இதன்மூலம் ரஜினிகாந்த் எந்த அளவுக்கு பணிவான மனிதர் என்பதை அறிய முடியும். எல்லோரிடமும் நன்கு பழகுவார். அவருடைய பணிவான நடவடிக்கைகளால் நான் வியந்துள்ளேன் என்றார்.
மேலும் சல்மான்கானை எல்லோருக்குமே பிடிக்கும். நான் யாரையும் காதலிக்கவில்லை. இந்தியில் கட்டுக்கோப்பாக உடலை வைத்துள்ள நடிகர் யார் என்று கேட்டால் அக்ஷய்குமார் என்பேன். இவ்வாறு எமிஜாக்சன் கூறியுள்ளார்.