Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீட்டாவை ஆதரித்து ஆப்பு வைத்துக்கொண்ட நடிகை

பீட்டாவை ஆதரித்து ஆப்பு வைத்துக்கொண்ட நடிகை
, வியாழன், 13 ஜூலை 2017 (11:06 IST)
ஏமி ஜாக்சன் தொடர்ந்து பீட்டா அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் பட வாய்ப்புகளை இழந்து தவித்து வருகிறாராம்.


 

 
ஏமி ஜாக்சன் தற்போது பாலிவுட் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். ஷங்கர் படம் அதுவும் ரஜினியுடன் எல்லா நடிகைகளும் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் ஏமி ஜாக்சனுக்கு 2.0 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது ஏமிக்கு ஷங்கருடன் இரண்டாவது படம்.
 
பொதுவாக ஷங்கர் அவரது படம் குறித்து மிக ரகசியமாக வைத்திருப்பார். படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும் போது புகைப்படங்கள் கூட வெளியிட விடமாட்டார். ஆனால் ஏமி ஜாக்சன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார். இதை ஷங்கர் கண்டித்து வந்தார்.
 
அதோடு இல்லாமல் பீட்டா அமைப்பு ஆதரவாக விளம்பர புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். ஜல்லிக்கட்டு பிரச்சனை வந்த போது தமிழக மக்கள் ஏமி ஜாக்சன் மீது கடும் கோபத்தில் இருந்தனர். ஷங்கர் ஏமி ஜாக்சன் செயலால் கோபமடைந்து அவரை கண்டித்துள்ளார். ஆனால் இதை ஏமி ஜாக்சன் செவி கொடுத்து கேட்கவில்லை.
 
இதையடுத்து ஏமி ஜாக்சனுக்கு தமிழில் பாட வாய்ப்புகள் எதுவும் இல்லை. பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது கன்னட படத்தில் குறைந்த சம்பளத்திற்கு நடிக்க உள்ளார். பீட்டாவை ஆதரித்து தனது சினிமா வாழ்க்கைக்கு ஆப்பு வைத்துக்கொண்டார் ஏமி ஜாக்சன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருண் விஜய் ஹீரோயினைத் தொடர்ந்து, வில்லனையும் தூக்கிய சசிகுமார்