தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமான எமி ஜாக்சன் அடுத்தடுத்து தனுஷ், விஜய், விக்ரம், ரஜினி போன்ற முன்னணி நடிகர்கல்ய்டன் நடித்துவிட்டார்.
இவர் நடிப்பில் கடைசியாக 2.0 படம் திரைக்கு வந்தது. இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் ஒரு படம் கூட இல்லை. இதற்கு இடையில் எமிக்கு தனது காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
அடுத்து திருமணம் எப்போது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவிற்கு எமி சென்றுள்ளார். அந்த விழாவிற்கு அவர் அணிந்து வந்த உடையை கண்டு பலரும் ஷாக்காகியுள்ளனர்.
மேலும், இந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளதால் அப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.