Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகப்போகுது.... இனிமேல் தான் ஏமி ஜாக்சனுக்கு திருமணமாம்

குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகப்போகுது....  இனிமேல் தான் ஏமி ஜாக்சனுக்கு திருமணமாம்
, புதன், 22 ஜூலை 2020 (08:39 IST)
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார்.

அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர். பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த பிறகு  ஏமி ஜாக்சன் - ஜார்ஜ் பெனாய்டோ திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கினாள் அது தள்ளி சென்றுவிட்டது. இந்த பிரச்சனை முடிந்தால் இவர்களது திருமணம் வசதியான இடத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் இருந்தும் நிறைய நண்பர்கள் வருவார்கள் என ஏமி கூறியுள்ளார். மேலும், சினிமா மற்றும் திரைப்பயணம் குறித்த அனுபவங்ககளை பகிர்ந்துகொண்ட ஏமி ஜாக்சன், ஒரு நடிகையாக,  மனுஷியாக வளர்ச்சி அடைய எனக்கு உதவிய இந்தியாவை மிஸ் பண்றேன். இது எல்லாவற்றிற்கும் காரணம் விஜய் தான்.

மதராசபட்டினம் படத்தில் நடிக்க நான் இந்தியா வந்தபோது படங்களில் அனுபவம் இல்லாத நேரத்தில் அவர் எனக்கு உதவினார். எனவே விஜய் எனக்கு காட்ஃபாதர் போன்று ஆகிவிட்டார்.  மேலும், 80 வயதானாலும் நான் படங்களில் நடிப்பேன். ஆனால், இப்போது எனக்கு குடும்பம் தான் முக்கியம். என் மகன் ஆண்ட்ரியாஸ் வேகமாக வளர்ந்து வருகிறான். வரும் செப்டம்பர் மாதம் அவனுக்கு ஒரு வயது ஆகிவிடும். என பல விஷயங்களை குறித்து பகிர்ந்துகொண்டார் ஏமி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"ஓ மை கடவுளே".... மீண்டும் கடவுள் ஆகிறார் விஜய் சேதுபதி!