Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 3 April 2025
webdunia

தேசிய விருதுகள் விழாவில் கலந்து கொள்ளமுடியவில்லை – வருத்தத்தில் அமிதாப் பச்சன் !

Advertiesment
அமிதாப்பச்சன் பாலிவுட் தாதாசாகேப் பால்கே விருது காய்ச்சல் amitabh bacchan
, செவ்வாய், 24 டிசம்பர் 2019 (13:05 IST)
தாதா சாகேப் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்குக் காரணம் காய்ச்சல்தான் என தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன்.

இந்திய சினிமாவின் தந்தை என அறியப்படும் தாதாசாகேப் பால்கே அவர்களின் பெயரால் இந்திய திரை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்தியாவில் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் மிக கௌரவமான விருதாக இவ்விருது கருதப்படுகிறது.

இதுதொடர்பாக அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘காய்ச்சலால் அவதிப்படுவது தன்னால் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை’ என வருத்தம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 29 ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்தின் போது விருதும் அதற்குரிய பணமும் அமிதாப் பச்சன் வசம் ஒப்படைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏஆர் முருகதாஸ் வெளியிட்ட தர்பார் வீடியோ” பரபரப்பில் டுவிட்டர்