Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் வேதா ரீமேக்… அமீர்கான் விலகல் – அதிர்ச்சியில் இயக்குனர்கள்!

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (10:52 IST)
விக்ரம் வேதா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் இருந்து நடிகர் அமீர்கான் விலகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான அமீர் கான் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தை அமீர் கானும், மாதவன் கதாப்பாத்திரத்தை சயிஃப் அலிகானும் ஏற்று நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழில் இயக்கிய புஷ்கர்-காயத்ரி ஆகியோரே இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகிக் கொன்ரு வந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த 8 மாதமாக எந்த பணிகளும் நடக்கவில்லை. அமீர்கான் இப்போது லால் சிங் லட்டா படப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது அவர் விக்ரம் வேதா ரீமேக்கில் இருந்து இப்போது அமீர்கான் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்துக்காக 3 ஆண்டுகள் காத்திருந்த இயக்குனர் புஷ்கர் காயத்ரி அதிர்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கிறாரா சீமான்?... ஓ அதுக்குதான் இந்த சந்திப்பா?

ஓடிடியில் ரிலீஸானது அரண்மனை 4… எந்த தளத்தில் தெரியுமா?

ராகவா லாரன்ஸுக்காகக் காத்திருக்கும் படை தலைவன் படக்குழு… இப்படி இழுத்தடிக்கலாமா?

இரண்டாவது வாரத்திலும் கலக்கும் மகாராஜா… விஜய் சேதுபதியின் முதல் 100 கோடி ரூபாய் வசூல் படமாக சாதனை படைக்குமா?

மீண்டும் தொடங்கும் 7 ஜி ரெயின்போ காலணி 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments