தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக உருவான அமீர் ஆதிபகவன் படத்தின் தோல்விக்குப் பிறகு அதிகமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வடசென்னை படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்ததாக நாற்காலி என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
அரசியல் கதைக்களம் கொண்ட படமாக உருவாகியுள்ளது அவர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு திரைப்படம். இந்த படத்தை தயாரிப்பாளர் ஆதம் பாவாவே இயக்கியுள்ளதாகவும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் இப்போது இந்த படத்தை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். அதே நாளில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.