இந்திய சினிமாவில் சூப்பர் அமீர்கான் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அமீர்கான் சில தினங்களுக்கு முன்னர் தனது 56 வது பிறந்தநாளைக் கொண்டாடினர். அவருக்கு பாலிவுட், கோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் என இந்தியா முழுவதிலும் உள்ள ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில், தனது சமூதளப் பக்கத்தில், தனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி…நான் சமூகவலைதளங்கிலிருந்து விலகுகிறேன். இதுதான் எனது கடைசி டுவீட் எனக் கூறியிருந்தார்.
அமீர்கானின் இந்த முடிவு குறித்து பலரும் பல விதமாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். அமீர்கான் இனிமேல் படங்களிலும் நடிக்கப் போவதில்லை என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் இப்போது அமீர்கான் விளக்கம் அளித்துள்ளார். அதில் உங்கள் கற்பனைகளை எல்லாம் சேர்த்து பேசாதீர்கள். நான் இனிமேல் சமூக ஊடகங்களில் இருக்க மாட்டேன். ஆனால் ஊடகங்கள் மூலமாக என்னுடைய ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பேன் எனக் கூறியுள்ளார்.