Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்பேத்கர் பாரதீய தலித் சாஹித்ய அகாடமி விருது வென்ற தமிழ் மற்றும் மலையாள இயக்குநர் பைஜு!!

Advertiesment
அம்பேத்கர் பாரதீய தலித் சாஹித்ய அகாடமி விருது
, செவ்வாய், 28 நவம்பர் 2023 (10:24 IST)
பிரபல திரைப்பட கலைஞர் இயக்குநர் பைஜு,சமூகத்தில் ஆற்றிய தலித்திய ஆதரவு செயல்பாடுகளுக்காக தேசிய அளவிலான அம்பேத்கர் பாரதீய தலித் சாஹித்ய அகாடமி விருது வென்றுள்ளார்.


பைஜு 20 வருடங்களுக்கு மேலாக மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி கலைஞராக பணியாற்றி வருகிறார். 74 படங்களுக்கு மேல் மலையாளத்தில் ரிலீஸ் செய்துள்ள இவர்  மலையாளத்தில் மாயகொட்டாரம், தமிழில் யாரோ ஒருவன் மறறும் படத்தை இயக்கியுள்ளார்.

தற்போது மூர்கன் எனும் திரைப்படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாக்கியுள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பனாரஸி பாபு எனும் பெயரில் மற்றொரு தமிழ்ப்படத்தை உருவாக்கி வருகிறார்.

திரைத்துறையில் மட்டுமல்லாது,சமூக செயல்பாட்டாளாரக சமூக நலன் கொண்ட பல பணிகளையும் செய்து வருகிறார். குறிப்பாக தலித்திய அடக்குமுறைகளுக்கு எதிரான இவரது சிறப்பான சமூகப்பணிகள் அனைவராலும் பாரட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவரது தலித்திய சமூக செயல்பாடுகளை கௌரவிக்கும் விதமாக 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான அம்பேத்கர் பாரதீய தலித் சாஹித்ய அகாடமி விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் செயல்பட்டு வரும்,  பாரதீய தலித் சாஹித்ய அகாடமி இயக்கம்,ஒவ்வொரு வருடமும் இந்தியா முழுதும் தேர்ந்தெடுக்கப்பட்ட  சமூக செயல்பாட்டாளர்களுக்கு தலித்திய சாஹித்ய அகாடமி விருதினை வழங்கி வருகிறது. இவ்வருடம் இந்த விருது பைஜு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

10 டிசம்பர் அன்று, டெல்லியில் நடைபெறும் இந்திய அளவிலான விழாவில் பல பிரபலங்கள் முன்னிலையில் வழங்கப்படவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி 68 படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் இந்த நாட்டில்தான்… தயாரிப்பாளர் வெளியிட்ட புகைப்படம்!