Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேப்டன் மில்லர் திரைப்படத்தை வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!

கேப்டன் மில்லர் திரைப்படத்தை வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!
, திங்கள், 26 செப்டம்பர் 2022 (09:27 IST)
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார். 

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தென்காசியில் தொடங்க உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சென்னையில் நடந்துள்ளது. அதில் தனுஷ், பிரியங்கா மோகன் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோருடன் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸூக்கு பிந்தைய ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா & ஐஸ்வர்யா ராய் அணிந்த நகைகள் ஏலம்?