Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித் நடித்த படத்தில் இதுதான் பிடிக்கும்… ஹெச் வினோத் சொன்ன ரகசியம்!

அஜித் நடித்த படத்தில் இதுதான் பிடிக்கும்… ஹெச் வினோத் சொன்ன ரகசியம்!
, செவ்வாய், 28 டிசம்பர் 2021 (09:58 IST)
அஜித் நடித்த படங்களிலேயே தனக்கு நேர்கொண்ட பார்வை மற்றும் அமர்க்களம் ஆகிய இரு படங்கள் மிகவும் பிடிக்கும் என ஹெச் வினோத் கூறியுள்ளார்.

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கியுள்ள வலிமை திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இந்த படத்துக்குப் பின்னர் அவர் மீண்டும் அஜித்தை மூன்றாவது முறை இயக்க உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் அஜித் நடிப்பில் தனக்குப் பிடித்த படம் எது என்பது குறித்து பதிலளித்துள்ளார்.

அதில் ‘தனிப்பட்ட முறையில் எனக்கு அஜித் படங்களில் நேர்கொண்ட பார்வை பிடிக்கும். ஆனால் நான் திரையுலகிற்கு வருவதற்கு முன்பே அஜித் நடித்த அமர்க்களம் திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். ரகுவரனின் ரசிகனான நான் அவருக்காக அந்த படத்தை பார்க்க சென்றேன். ஆனால் அஜித் மிக சிறப்பாக நடித்திருந்தார். அது மட்டுமில்லாமல் இயக்குனர் சரணின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டப்பிங் படங்களை விட தமிழ் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்… சீனு ராமசாமி!