Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா திரும்பிய கமல்ஹாசன்… அமரன் படத்தின் நூறாவது நாள் விழாவில் நடந்த மாற்றம்!

vinoth
சனி, 1 பிப்ரவரி 2025 (09:36 IST)
கடந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடித்த அமரன் திரைப்படம். தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படம் பெரிய அளவில் பாராட்டுகளையும் வசூலையும் குவித்தது.

இதுவரை சிவகார்த்திகேயனின் திரைவாழ்க்கையில் இல்லாத மிகப்பெரிய வெற்றிப்படமாக அமரன் அமைந்துள்ளது. அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சென்ற ஆண்டின் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் 100 ஆவது நாள் விழா பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து வந்ததும்  சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் நடக்கும் என சொல்லப்பட்டது.

இப்போது கமல்ஹாசன் சென்னை திரும்பியுள்ள நிலையில் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விழா நடக்கும் இடம் மற்றும் மாற்றப்பட்டுள்ளதாம். சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒன்பது கிரகங்களில் உச்சம் பெற்ற ஒருவன்… அஜித்தின் அடுத்த படத்துக்கும் சாய் அப்யங்கர்தான் இசையா?

மனுசி படத்தை மீண்டும் பார்த்து மறு ஆய்வு செய்ய சென்சார் போர்டு சம்மதம்.. !

இயக்குனர் பா ரஞ்சித் வீட்டில் நிகழ்ந்த சோகம்!

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments