Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமலா பால் வெளியிட்ட பள்ளி கால புகைப்படம் – இணையத்தில் செம்ம ஹிட்!

அமலா பால் வெளியிட்ட பள்ளி கால புகைப்படம் – இணையத்தில் செம்ம ஹிட்!
, புதன், 25 நவம்பர் 2020 (17:34 IST)
நடிகை அமலா பால் தனது பள்ளிக்கால புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையில் முகாமிட்டுள்ள அமலா பால் இப்போது சமுகவலைதளங்கள் மூலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவேற்றி ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது வித்தியாசமாக தனது பள்ளிக்கால புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் நடிகையிடம் கேரவனில் அத்துமீற முயன்ற தயாரிப்பாளர்!