Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ.. நடிகை அமலா பால் உள்பட 105 கர்ப்பிணிகள் பங்கேற்பு..!

amalapaul

Siva

, செவ்வாய், 14 மே 2024 (13:36 IST)
கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ கேரளாவில் நடந்த நிலையில் அதில்  நடிகை அமலா பால் உள்பட 105 கர்ப்பிணிகள் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பெண்களின் மகப்பேறு காலத்தை மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், கேரள மாநிலம் கொச்சியில் தனியார் மருத்துவமனை சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை அமலா பால் கலந்துகொண்டார்.
 
105 கர்ப்பிணிப் பெண்கள் இதில் கலந்து கொண்டனர். உலகளவில் அதிக கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்ட ஃபேஷன் ஷோ என்ற அங்கீகாரம் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ளது.
 
நடிகை அமலாபால் கடந்த ஆண்டு காதலர் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கர்ப்பம் ஆனார் என்பதும் தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் தயாரான தமிழ்த் திரைப்படம் தி வெர்டிக்ட்"