Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆன அமலா பால் நடித்துள்ள ‘தி டீச்சர்’ வெப் தொடர் !

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (08:57 IST)
பல்வேறு முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் தற்போது ஓடிடி வெப் சீரிஸ்களில் நடிக்க தொடங்கிவிட்டனர்.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். இடையில் அவர் திருமணம் செய்துகொண்டு குறுகிய காலத்திலேயே விவாகரத்தும் செய்தார்.

இதையடுத்து இப்போது தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் இப்போது முன்புபோல அவருக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. இதையடுத்து அவர் நடித்த கடாவர் என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி சிறிய அளவில் கவனம் பெற்றது.

இந்நிலையில் இவர் நடித்துள்ள தி டீச்சர் என்ற வெப் சீரிஸ் இப்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த தொடரில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக தன்னை வல்லுறவு செய்தவர்களை பழிவாங்கும் உடல் பயிற்சி ஆசிரியராக அமலா பால் நடித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெளி தயாரிப்பாளர் படத்தில் கமல் நடிக்க மாட்டாராம்.. 10 வருஷமா அதுதானே நடக்கிறது?

கமல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாரா சாய்பல்லவி? என்ன காரணம்?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments