Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகை தற்கொலை? ரசிகர்கள் அதிர்ச்சி

Tunisha sharma
, சனி, 24 டிசம்பர் 2022 (22:33 IST)
மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை துனிஷா சர்மா( 20) இன்று திடீரென மரணம் அடைந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மஹாராஷ்டிர மா நிலம் மும்பையைச் சேர்ந்த பிரபல நடிகை துனிஷா சர்மா. இவர் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்த  நிலையில்,வசாய் என்ற பகுதியில் நடந்த சினிமா ஷூட்டிங்கு இன்று சென்ற  நடிகை துனிஷா, மேக்கப் அறைக்குச் சென்றார்.

அதன் பின்னர், நீண்ட நேரமாகியும் வராததால், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நடிகை துனிஷாவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இது, தற்கொலையா, கொலையா என்பது குறித்து  வழகுப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''வாரிசு'' பட ஆடியோ வெளியீட்டு விழா தொடங்கியது... வைரலாகும் வீடியோ