நடிகை அமலா பால் சிகிரெட் பிடிப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் பலரது விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது.
கேரளாவைச் சேர்ந்த அமலா பால், இயக்குநர் விஜய்யைக் காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமண பந்தம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்ற இருவரும், தனித்தனியாக வசித்து வருகின்றனர். அதன்பிறகு தற்பொழுது நிறைய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் அமலா பால். அவ்வப்போது இணையத்தில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்புவார்.
இந்நிலையில் அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகை பிடிப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது பலரின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.