Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை! – நண்பராக இருந்தவர் கைது!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (12:13 IST)
பிரபல தமிழ் நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் பிரபல நடிகையாக அறியப்படுபவர் அமலா பால். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான “மைனா” படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் தெய்வத்திருமகள், தலைவா, சேட்டை என பல படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்த இவர் சில ஆண்டுகள் கழித்து விவகாரத்து பெற்ற நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து படங்கள் நடித்து வரும் அமலா பால் அடிக்கடி போட்டோஷூட்டுகளும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள ஆரோவில் என்ற பகுதியில் உள்ள வீட்டில் அமலா பால் தங்கியிருந்தபோது அவரது நண்பரான ஜெய்ப்பூரை சேர்ந்த பவீந்தர் சிங் என்பவர் அமலா பாலுக்கு பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமலா பால் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் போலீஸார் பவீந்தர் சிங்கை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சினி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னத்திரை நயன்தாரா வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கருநிற உடையில் கண்கவர் லுக்கில் கவரும் பிரியா பவானி சங்கர்!

DNA வெற்றியால் முடங்கிக் கிடந்த அதர்வாவின் படம் ரிலீஸுக்குத் தயார்!

கைவிடபட்டதா ’96 இரண்டாம் பாகம்?’… விக்ரம்முடன் கூட்டணி போடும் இயக்குனர் பிரேம்!

பெண்களின் தயக்கமும் பயமும்தான் தவறுகளுக்குக் காரணமாக அமைகிறது… நடிகை பவானி ஸ்ரீ கருத்து!

அடுத்த கட்டுரையில்