Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று முதல் சுதந்திர பறவையாக மாறினார் அமலாபால்

இன்று முதல் சுதந்திர பறவையாக மாறினார் அமலாபால்
, செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (21:09 IST)
பிரபல நடிகை அமலாபால் மற்றும் இயக்குனர் விஜய் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.




அமலாபால், விஜய் ஆகிய இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டதால் குடும்பநல நீதிமன்றம் இன்று அவர்களுக்கு விவாகரத்து அளித்தது. எனவே இன்று முதல் அமலாபால் சுதந்திர பறவையாக மாறினார்.

'தெய்வத்திருமகள்' படத்தின் படப்பிடிப்பின்போது இருவரும் காதலித்து அதன்பின்னர் கடந்த 2014ஆம் ஆண்டு விஜய்-அமலாபால் திருமணம் நடைபெற்றது. மிகவும் பொருத்தமான ஜோடி என திரையுலகினர்களால் போற்றப்பட்ட இந்த ஜோடியின் குடும்ப வாழ்க்கை மிகக்குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்துவிட்டது பெரும் சோகமே.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எமன் படத்தின் 4 நிமிட வீடியோ