Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெகெட்டிவ் விமர்சனங்களுக்கு நன்றி… இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் பதிவு!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (10:07 IST)
அல்போன்ஸ் புத்ரன் இயக்கி பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கோல்டு திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் 7 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்போது அவர் இயக்கியுள்ள கோல்டு திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த திரைப்படம் எந்தவித ப்ரமோஷனும் இல்லாமல் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. ஆனால் மிகவும் எதிர்பார்த்த இந்த படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் அதிருப்தி அடையச் செய்துள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் தங்களுக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லை என சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பரப்பி வருகின்றன.

இந்நிலையில் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள அல்போன்ஸ் புத்ரன் “ நெகட்டிவ் விமர்சனங்களுக்கு நன்றி. ஒரு டீ நல்லா இல்லையென்றால், அது ஏன் நல்லா இல்லை என்று சொன்னால்தான், டீ தயாரித்தவரால் அடுத்த முறை தவறை திருத்திக் கொள்ள முடியும். அப்படி இல்லாமல் டீ நல்லா இல்லை என்று தடாலடியாக சொல்லிவிட்டால், இரு தரப்புக்குமே பயன் இருக்காது. அதனால் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு நன்றி.” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல தயாரிப்பாளர் திருமணத்தில் தனுஷ் - நயன்தாரா பங்கேற்பு.. நேருக்கு நேர் சந்தித்தார்களா?

6 மாதத்தில் இவ்வளவுதான் முடிந்துள்ளதா?.. LIK ஷூட்டிங்கில் அட்ராசிட்டி பண்ணும் விக்னேஷ் சிவன்!

எக்குத்தப்பான கிளாமர் ட்ரஸ்ஸில் போட்டோஷூட் நடத்திய திஷா பதானி!

ஸ்டைலிஷ் லுக்கில் புகைப்பட ஆல்பத்தை வெளியிட்ட ரெஜினா!

சஞ்சய் இயக்கும் படத்துக்கு இவர்தான் இசையா? வெளியான தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments