அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்தார் ரேவதி என்ற பெண், நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவருடைய மகனும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, அவரது உடல்நிலை தேறி வருவதாக கூறப்படும் நிலையில், சிறுவனின் சிகிச்சைக்கு ரூபாய் 2 கோடி தர இருப்பதாக அல்லு அர்ஜுனின் தந்தை அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, இந்த சிறுவனின் மருத்துவ செலவுக்கு ஒரு கோடி ரூபாய் அளிப்பதாக அல்லு அர்ஜுன் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த பணத்தை இரண்டு மடங்காக 2 கோடியாக அதிகரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த குடும்பத்திற்கு படக்குழு ஏற்கனவே 50 லட்சம், இயக்குநர் 50 லட்சமும் வழங்குவதாக தெரிவித்துள்ளது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், தற்போது சிறுவனின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் ஐசியு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரேவதி இறந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நிலையில், மீண்டும் அவரை விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக விரைவில் அவருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva