பல கோடிகள் சம்பளம் தர முன்வந்தும் சிகரெட் விளம்பரத்தில் நடிக்க முடியாது என அல்லு அர்ஜுன் கூறியிருப்பது அவர் மீதான மதிப்பு மரியாதையை அதிகரித்துள்ளது
இந்தியாவின் புகழ்பெற்ற சிகரெட் நிறுவனங்களில் ஒன்று அல்லு அர்ஜூனை அணுகி தங்களது நிறுவனத்தின் புகையிலை தயாரிப்பு விளம்பரத்தில் நடிக்கும் படி கேட்டுள்ளனர்
இதற்காக பல கோடிகள் சம்பளம் தரவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் சிகரெட் விளம்பரத்தில் நடிக்க முடியாது என்று அந்த வாய்ப்புபை அல்லு அர்ஜூன் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது
சிகரெட் விளம்பரத்தில் தான் நடித்தால் தனது ரசிகர்களும் புகையிலையை பயன்படுத்துவார்கள் என்றும் அதற்கு தானே வழியமைத்துக் கொடுக்க கூடாது என்பதால் அந்த விளம்பர படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க மறுத்ததாகவும் கூறப்படுவதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது