புஷ்பா 2 படத்துக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் அடுத்த படம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (11:48 IST)
புஷ்பா படத்தின் வெற்றி அல்லு அர்ஜுனை பேன் இந்தியா ஹீரோவாக்கியுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் பட்ஜெட் பலமடங்கு உயர்ந்துள்ளது.

புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம். முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இரண்டாம் பாகத்தில் நடிக்க, கூடுதலாக சில நடிகர்களும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் புஷ்பா 2 படத்துக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. திரிவிக்ரம் – அல்லு அர்ஜுன் கூட்டணி நான்காவது முறையாக இணையும் இந்த படத்தை அல்லு அர்ஜுனின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இது சம்மந்தமான போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

கமல் ஒன்னும் பெரிய நடிகர்லாம் இல்லை… தேவயானியின் கணவர் ராஜகுமாரன் சர்ச்சைக் கருத்து!

அஜித் 64 படம் தொடங்குவது எப்போது?... ஆதிக் கொடுத்த அப்டேட்.!

அட்லி& அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங் இவ்வளவு முடிந்து விட்டதா? நடிகை கொடுத்த அப்டேட்.!

அடுத்த கட்டுரையில்
Show comments