Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேட்கப்பட்ட எல்லா கேள்விக்கும் பதில் இதுதான்: நாசர் பேச்சு!

Advertiesment
கேட்கப்பட்ட எல்லா கேள்விக்கும் பதில் இதுதான்: நாசர் பேச்சு!
, சனி, 1 ஏப்ரல் 2017 (11:53 IST)
நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நேற்று சென்னையில் விமர்சையாக நடைபெற்றது. ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் கலந்து கொண்டு நிகழச்சியை சிறப்பித்தனர்.

 
விழாவில் பேசிய நடிகர் சங்க தலைவர் நாசர், நாங்கள் எங்கள் கடமையை தான் செய்திருக்கிறோம். இது நடக்கும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் இதுநாள் வரை கட்டடம் குறித்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தோம். சொல்லிக் கொண்டு இருப்பதை விட எங்களின் செயலில் காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதன்படி  கட்டடம் கட்டும் பணியை தொடங்கிவிட்டோம். 
 
இது தான் எங்களிடம் கேட்கப்பட்ட எல்லாக்கேள்விகளுக்குமான பதில் என்றார். கட்டடம் கட்டி முடிக்க 18 மாதங்கள் ஆகும் என்றும், தங்களின் அடுத்த திட்டம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று நடிகர் நாசர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாரா நடித்த கொலையுதிர்காலத்தை தயாரிக்கும் இந்திப்பட நிறுவனம்!