இயக்குனர் முருகதாஸ் இப்போது ஒரு ஆண்டு காலமாக எந்த படமும் இல்லாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது தனது அடுத்த படத்துக்காக பல கதாநாயகர்களிடம் கதை சொல்லி வருகிறாராம்.
ஆனால் அவர் கதை சொல்லும் நாயகர்கள் எல்லோருமே விஜய்க்கு சொல்லி அவர் நிராகரித்த கதை வேண்டாம், புதிய கதை சொல்லுங்கள் என்று நிபந்தனை விதிக்கிறார்களாம். அதனால் இப்போது புதிதாக கதை உருவாக்கி வருகிறாராம் முருகதாஸ்.