Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி தொடர்ந்த ஜீவனாம்சம் வழக்கு..! பிரபல நடிகருக்கு கைது வாரண்ட்..!

Senthil Velan
வெள்ளி, 14 ஜூன் 2024 (16:26 IST)
மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கவில்லை என்ற வழக்கில் நடிகர் பிருத்விராஜிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து விஜயவாடா குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் தாடேபள்ளிகூடத்தை சேர்ந்தவர் பாலிரெட்டி பிருத்விராஜ், தெலுங்கு திரைப்பட காமெடி நடிகரான இவர்,  தமிழிலும் பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் நடத்துள்ளார். 
 
இவர் கடந்த 1984ம் ஆண்டு லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திருமணமான சில ஆண்டுகளுக்கு பின்னர் பிருத்விராஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
 
இந்நிலையில் லட்சுமி தனது குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டில் வசிக்கிறார். கடந்த 2017ம் ஆண்டு விஜயவாடாவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு அவர் வழக்கு தொடர்ந்தார். அதில், பிருத்விராஜ் மாதம் ₹30 லட்சம் சம்பாதிக்கிறார். எனக்கு மாதம் ₹8 லட்சம் பராமரிப்புத் தொகையாக தருமாறும், வழக்கு செலவுகளுக்கான தொகையை பெற்று தரும்படியும் கோரினார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனைவி லட்சுமிக்கு ஜீவனாம்சமாக மாதம் 8 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்  பிருத்விராஜூக்கு உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி பிருத்விராஜ் ஜீவனாம்சம் வழங்கவில்லை என்று கூறி லட்சுமி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

ALSO READ: மக்களுக்கு ஷாக்..! வீடுகளுக்கான மின் கட்டணம் மீண்டும் உயர்வு..!
 
இதன் மீதான விசாரணையின் போது, நீதிமன்ற உத்தரவை  பின்பற்றாததால் பிருத்விராஜுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் ஆணையிட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனைவி தொடர்ந்த ஜீவனாம்சம் வழக்கு..! பிரபல நடிகருக்கு கைது வாரண்ட்..!

விஜய் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகும் கோட் செகண்ட் சிங்கிள்!

கங்குவா படம் எப்போது ரிலீஸ்… தயாரிப்பாளர் தனஞ்செயன் கொடுத்த அப்டேட்!

மீண்டும் வெற்றிப்பாதையில் கோலிவுட் திரையுலகம்.. மூன்று படங்கள் தொடர் வெற்றி..!

மகாராஜா: விஜய் சேதுபதியின் படம் எப்படியிருக்கிறது?

அடுத்த கட்டுரையில்
Show comments