Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகும் கோட் செகண்ட் சிங்கிள்!

vinoth
வெள்ளி, 14 ஜூன் 2024 (16:24 IST)
விஜய் அரசியலில் இறங்கப் போவதால் தற்போது நடித்து வரும் கோட் படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என அறிவித்துள்ளார். இதனால் தற்போது அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடந்து வரும் நிலையில்  செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடல் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இதை சூசகமாக படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியும் வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

ஷாலினிக்கு நடந்த அறுவை சிகிச்சை?... சென்னைக்கு திரும்பாமல் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments