Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏ.கே.மோட்டார்ஸ் : இளைஞர்களை ஈர்க்கும் அஜித்-ன் முயற்சி

Advertiesment
ajithkumar

Sinoj

, வியாழன், 21 மார்ச் 2024 (23:24 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில், விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்த நிலையில், விரைவில்  2 வது கட்ட ஷூட்டிங்  தொடங்க உள்ளது.
 
சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட அஜித்குமார், அதிலிருந்து குணமடைந்து மீண்டும் பைக் பயணம் தொடங்கியுள்ளார்.
 
இதுகுறித்த புகைப்படம் வெளியானது. இந்த நிலையில், நேற்று அஜித்குமார் ஒருவருக்கு பைக் ஓட்டக் கற்றுத்தருவது போன்ற வீடியோ வைரலானது.
 
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அஜித், ஏகே மோட்டார்ஸ் என்ற  நிறுவனம் தொடங்கியிருந்தார்.
 
எனவே இந்த நிறுவனத்திற்கு இளைஞர்களை வரவேற்கும் பொருட்டும், இந்த நிறுவனத்தை மேலும் வளர்க்கும்   நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அஜித், இதற்கென பிரத்யேகமாக ஆட்களை தேர்வு செய்து வருவதுடன் தனது அனுபவத்தையும் உடன் சேர்ந்து பயனர்களுக்கு கற்றுக் கொடுக்கும் நோக்கில்தான் இந்த வீடியோவை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் 'குட் 'படத்தை லூஸ் டாக்கால் இழந்த வெங்கட்பிரபு?