Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்தால் காஜல் அகர்வாலுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

Advertiesment
அஜித்தால் காஜல் அகர்வாலுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்
, திங்கள், 24 ஜூலை 2017 (06:54 IST)
அஜித், காஜல் அகர்வால் நடித்துள்ள 'விவேகம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகிவிட்டது. இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை என்பது மட்டுமே பாக்கி



 
 
தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதே நாளில் ராணா, காஜல் அகர்வால் நடித்த நேனே ராஜா நேனே மந்திரி' என்ற தெலுங்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒரே நாளில் இரண்டு காஜல் அகர்வால் படம் வெளியானால் தெலுங்கு காஜல் ரசிகர்கள் எந்த படத்தை முதலில் பார்ப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
 
இதனால் நேனே ராஜா நேனே மந்திரி' படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க அப்படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கில் அஜித்தை விட ராணாவுக்கு அதிக மார்க்கெட் இருந்தாலும் 'விவேகம்' படத்திற்கு ஏற்பட்டுள்ள மிக அதிகப்படியான எதிர்பார்ப்பு காரணமாக நேனே ராஜா நேனே மந்திரி போட்டியில் இருந்து விலகிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரசாந்தின் அடுத்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி