Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''வலிமை'' பட மேக்கிங் வீடியோ புதிய சாதனை.....

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (15:52 IST)
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ இணையதளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம்  கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக  வரும்  பிப்ரவரி 24 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

உலகம்முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள வலிமை படம் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள முதல் பான் இந்தியா படம் வலிமை என தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வலிமை பிற மொழி டிரெய்லர்கள் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் போனி கபூர் “இந்தியில் வலிமை ஆயிரத்திற்கும் அதிகமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இவ்வளவுக்கும் இந்தியில் வலிமை படத்திற்காக விளம்பரம் மற்றும் ப்ரோமோஷன் பணிகள் கூட செய்யப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

இ  ந் நிலையில் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று Sony Music South    யூடியூப் பக்கத்தில் வெளியானது. இந்த  வீடியோ தற்போதுவரை சுமார் 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும், 6 லட்சத்திற்கும் மேல் லைக்ஸுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள்   மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  வலிமை பட ரிலீஸாக இன்னும் 9 நாட்கள் உள்ளது என கவுன்டவுன் சொல்லி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments