கஜா புயல் நிவாரணதிற்கு தல அஜித் ரூ 5 கோடியை கொடுத்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு பல நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் உதவி செய்து கொண்டிருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் அஜித்குமார் 5 கோடி ரூபாய் நிதி வழங்கி இருக்கிறார் என விநியோகிஸ்தர் 7ஜி சிவா கூறியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்வேறு திரையுலகினரும் தங்களுடைய ரசிகர் மன்றங்கள் மூலமாகவும், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியளித்தும் வரும் நிலையில் அஜித் எந்த ஒரு தகவலும் இல்லாமல் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்ததன் மூலம் மன்றம் பெயரில்லாமல் ரசிகர்களை முடிந்த அளவு உதவி செய்ய சொல்வதனை எடுத்துக்காட்டுகிறது.
புயலால் பாதிக்கப்பட்டோருக்கு 5 கோடியை வழங்கிய நடிகர் அஜித் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு 15 லட்சம் வழங்கியுள்ளதாக அஜித்தின் தீவிர ரசிகர் 7ஜி சிவா தெரிவித்துள்ளார்.
இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வீரம்’ படத்தை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து 'கட்டமராயுடு' என்ற பெயரில் ரீமேக் செய்தார். அதன் தமிழக உரிமையை வாங்கி வெளியிட்டவர் 7ஜி சிவா.
இதனை பற்றி 7ஜி சிவா கூறியதாவது, “அனைவருமே அஜித் சார் 15 லட்சம் கொடுத்தார் என்று சொல்வார்கள். 15 லட்சம் கிடையாது. 5 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். தான் செய்த உதவிகளை வெளியே சொல்லாதது அவருடைய கேரக்டர். அவருடன் பெர்சனலாக பேசியிருக்கேன், பழகியிருக்கேன் என்பதால் எனக்கு தெரியும். எதையுமே விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டார்” என்று பேசியுள்ளார் 7ஜி சிவா.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், பலரும் கஜா புயலுக்கு ரூ. 5 கோடி கொடுத்தது உண்மையா என்ற விசாரணையிலும் இறங்கியுள்ளனர்.