Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்! – அஜித் வெளியிட்ட அறிக்கை!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (16:28 IST)
நேற்று சென்னை வந்த பிரதமரிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட நிலையில் அஜித் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்ட நிலையில் எந்த விதமான அப்டேட்டும் வெளியாகததால் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு அடிக்கடி படக்குழுவினரை கேட்டு வந்தனர்.

ஆனால் தற்போது சமீப காலமாக பார்க்கும் முக்கிய பிரமுகர்களிடம் கூட வலிமை அப்டேட் கேட்க தொடங்கிவிட்டனர். கிரிக்கெட் மைதானத்தில், அரசியல்வாதிகளின் கூட்டத்தில் என வலிமை அப்டேட் கேட்கப்படுவது வைரலாகி வரும் நிலையில் நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “வலிமை அப்டேட் வெளியிடுவது குறித்து நானும் தயாரிப்பாளரும் பேசி முடிவெடுப்போம். அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்கவும். எனது ரசிகர்கள் என்ற பெயரில் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகளிடம் அப்டேட் கேட்டு சிலர் தொல்லை தருவது என்னை வருத்தமுற செய்கிறது” என கூறியுள்ளார்.

மேலும் “உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு. எனக்கு அது தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம்மை உயர்த்தும்” என கூறியுள்ள அஜித்குமார் பொதுவெளியில் ரசிகர்கள் கண்ணியம், கட்டுபாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments