Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘AK உடன் இனிய சந்திப்பு… அதைத் தவிர வேறு என்னப் பேச முடியும்?’ – யுவன் நெகிழ்ச்சி!

vinoth
வியாழன், 19 ஜூன் 2025 (09:12 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. தற்போது சினிமாவுக்கு வெளியே கார் பந்தயங்களிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார் அஜித்.

தற்போது கார் ரேஸ் பந்தயங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித் சினிமாவிற்கு எப்படி நேரம் ஒதுக்கப் போகிறார் என்பது குறித்தக் கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனாலும் ஆண்டுக்கு ஒரு படம் தன்னிடம் இருந்து வரும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “AK உடன் ஒரு இனிய சந்திப்பு. கார்களைத் தவிர வேறு என்ன சிறந்த தலைப்பில் நாங்கள் பேச முடியும்?” எனப் பதிவிட்டுள்ளார். யுவன் சமீபகாலமாக துபாயில் வசித்து வருகிறார். அஜித்தும் துபாயில் அதிக நாட்கள் இருப்பதால் இந்த சந்திப்பு துபாயில் நடந்திருக்கலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரங்கம் அதிரட்டுமே.. விசிலு பறக்கட்டுமே! "கூலி" திரைப்படத்தின் கொண்டாட்டம்

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்? சிங்கத்தின் ஆட்டம் விரைவில் என பதிவு..!

கூலி டிக்கெட் முன்பதிவு.. 1 மணி நேரத்திற்கு 1 கோடி ரூபாய் வசூலா?

500 கோடி வசூலை குவித்த படத்தின் கதையை எழுதியது சாட்ஜிபிடியா? - ஆச்சர்ய தகவல்!

ஜொலிக்கும் கிளாமர் உடையில் பிரியங்கா மோகனின் ரீசண்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments