நடிகர் அஜித் இதுவரை எடுக்கப்பட்ட வலிமை படத்தின் காட்சிகளைப் பார்த்துள்ளாராம்.
இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் மே மாதத்தில் இருந்து தொடங்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது இதுவரை எடுக்கப்பட்ட வலிமை படத்தின் காட்சிகளை எல்லாம் எடிட் செய்து அஜித் உள்ளிட்ட முக்கியப் படக்குழுவினர் பார்த்துள்ளனராம். முழுவதையும் பார்த்த அஜித் படம் பயங்கர ஏ செண்டர் படம் போல இருக்கு.. கமர்ஷியல் மசாலாவான காட்சிகளை சேர்க்க வேண்டும் என சொல்லியுள்ளாராம்.